நாளை மின் நிறுத்தம்

விழுப்புரம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்;

Update:2022-07-02 22:43 IST

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்டம் பூத்தமேடு துணை மின் நிலையத்திற்குட்பட்ட அதனூர் மின்னூட்டி, திருப்பாச்சனூர் துணை மின் நிலையத்திற்குட்பட்ட வி.மடம் மின்னூட்டி ஆகியவற்றில் நாளை (திங்கட்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை சோழகனூர், சோழம்பூண்டி, ஆசாரங்குப்பம், எடப்பாளையம், ஆரியூர், வெங்கந்தூர், திருப்பாச்சனூர் காலனி, தென்குச்சிப்பாளையம், ராசாப்பாளையம், சேர்ந்தனூர், அரசமங்கலம் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இதேபோல் விழுப்புரம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மாம்பழப்பட்டு, நகரம் ஆகிய பீடர்களிலும், நந்தவனம் மின்னூட்டியிலும் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை கொண்டங்கி, திருப்பச்சாவடிமேடு, சத்திப்பட்டு, கோவிந்தபுரம், வெண்மணியாத்தூர், கல்பட்டு, சிறுவாக்கூர், லட்சுமிபுரம், தெளி, ஒட்டன்காடுவெட்டி, நத்தமேடு, நன்னாடு, விராட்டிக்குப்பம், ஆலாத்தூர், நேருஜி சாலை, திரு.வி.க. சாலை, வ.உ.சி. தெரு, குருசாமிபிள்ளை தெரு, சந்தான கோபாலபுரம், பழைய நீதிமன்றம் சாலை, நடராஜ் தெரு, தலைமை தபால் நிலையம், சங்கரமட தெரு, நாப்பாளையத்தெரு, காமராஜர் தெரு, மந்தக்கரை, கமலா நகர், கைவல்லியர் தெரு, திடீர்குப்பம், முத்தோப்பு, சேவியர் காலனி, தக்கா தெரு, மேல்செட்டி தெரு, காட்பாடி ரெயில்வே கேட் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது.

இந்த தகவலை விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சைமன்சார்லஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்