நாளை மின்சாரம் நிறுத்தம்

கன்னிவாடி, வேடசந்தூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Update: 2023-07-19 20:00 GMT

கன்னிவாடி துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி கன்னிவாடி பேரூராட்சி பகுதி, மணியக்காரன்பட்டி, பழைய கன்னிவாடி, தருமத்துப்பட்டி, கோம்பை, சுரக்காய் பட்டி, மலையாண்டிபுரம், மேலதிப்பம்பட்டி, கீழதிப்பம்பட்டி, புதுப்பட்டி, தெத்துப்பட்டி, தோணிமலை, சந்தமநாயக்கன்பட்டி, ரெட்டியார்பட்டி, காப்பிலிய பட்டி, பண்ணைப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி, ராமலிங்கம்பட்டி, ஆலத்தூரான்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது என்று கன்னிவாடி மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் காத்தவராயன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் வேடசந்தூர் அருகே உள்ள மினுக்கம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை நடைபெறுகிறது. இதையொட்டி அய்யர்மடம், கோட்டைமேடு, குரும்பபட்டி, மினுக்கம்பட்டி, வி.புதுக்கோட்டை, சிக்குபள்ளம்புதூர், கேத்தம்பட்டி, தோப்புப்பட்டி, குன்னம்பட்டி, குட்டம், எஸ்.குட்டம், ஆசாரிபுதூர், எஸ்.சுக்காம்பட்டி, கொன்னாம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது என்று வேடசந்தூர் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்