நாளை மறுநாள் மின் நிறுத்தம்

அரசூர், வளவனூர் பகுதியில் நாளை மறுநாள் மின் நிறுத்தம்

Update: 2022-09-17 18:45 GMT


விழுப்புரம்

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அரசூர், பேரங்கியூர், இருவேல்பட்டு, மாமந்தூர், ஆலங்குப்பம், தென்மங்கலம், காந்தலவாடி, கரடிப்பாக்கம், மேலமங்கலம், திருமுண்டீச்சரம், காரப்பட்டு, ஆனத்தூர், சேமங்கலம், தி.குமாரமங்கலம், கீழ்தணியாலம்பட்டு, மேல்தணியாலம்பட்டு, குடுமியான்குப்பம், சிறுகிராமம், மடப்பட்டு, இருந்தை, சித்தானங்கூர், பருகம்பட்டு, பரவணந்தல், கருவேப்பிலைப்பாளையம், செரத்தனூர் ஆகிய இடங்களில் மின்சார வினியோகம் இருக்காது என விழுப்புரம் மின்வாரிய செயற்பொறியாளர் சைமன்சார்லஸ் தெரிவித்துள்ளார்.

அதேபோல் வளவனூர் துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் வளவனூர், சகாதேவன்பேட்டை, பனங்குப்பம், கோலியனூர், தொடர்ந்தனூர், சாலை அகரம், ராமையன்பாளையம், மழவராயனூர், இளங்காடு, செங்காடு, நரையூர், தனசிங்குபாளையம், கல்லப்பட்டு, மேல்பாதி, குரும்ங்கோட்டை, எரிச்சனாம்பாளையம், அற்பிசம்பாளையம், புதுப்பாளையம், சிறுவந்தாடு, தாதம்பாளையம், மோட்சகுளம், சாலையம்பாளையம், வாணியம்பாளையம், பஞ்சமாதேவி, ப.வில்லியனூர், குச்சிப்பாளையம், கள்ளிப்பட்டு, வடவாம்பலம், நரசிங்கபுரம், மடம், அரசமங்கலம், நல்லரசன்பேட்டை ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என கண்டமங்கலம் கோட்ட செயற்பொறியாளர் சிவகுரு தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்