விண்ணவனூரில் 20-ந் தேதி மின் நிறுத்தம்
விண்ணவனூரில் 20-ந் தேதி மின் நிறுத்தம் செய்ய்பட உள்ளது.
விண்ணவனூரில் 20-ந் தேதி மின் நிறுத்தம் செய்ய்பட உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் விண்ணவனூர் துணை மின் நிலையத்தில் வருகிற 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணவனூர், பாச்சல், சேரந்தாங்கல், குப்பந்தாங்கல், நரசிங்கநல்லூர், கண்ணகுருக்கை, அம்மாபாளையம், இறையூர், கொட்டகுளம், கரியமங்கலம், சொர்பனந்தல், அரியாகுஞ்சூர், கலத்தாம்பாடி, பிஞ்சூர், உச்சிமலைகுப்பம், மேல்பென்னாத்தூர், அரட்டவாடி, தொரப்பாடி, முத்தனூர், மேல்முடியனூர் மற்றும் பூங்குட்டை பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது என செயற்பொறியாளர் சங்கரன் தெரிவித்து உள்ளார்.