தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மணிமண்டபம் பகுதியில் நாளை (சனிக்கிழமை) நெடுஞ்சாலை துறையால் சாலை விரிவாக்க பணிக்காக மின்கம்பங்கள் மாற்றும் பணி நடக்க உள்ளது. இதன் காரணமாக மணிமண்டபம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்வினியோகம் பெறும் அண்ணாநகர். பர்மா காலனி சாந்தி நகர், ராஜராஜன் நகர், சித்ரா நகர், நாஞ்சிக்கோட்டை ரோடு, பாத்திமா நகர், முனியாண்டவர் காலனி, சிட்கோ, மேரீஸ்கார்னர், பூக்காரத் தெரு, கல்லுக்குளம், அன்பு நகர், ஜெகநாதன் நகர், கோரிகுளம், துளசி ராமன் நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.