பெரியகுளம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தம்
பெரியகுளம் பகுதியில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படுகிறது
பெரியகுளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி பெரியகுளம் நகர், தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் நாளை மறுநாள் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இத்தகவலை பெரியகுளம் மின்வாரிய செயற்பொறியாளர் பால பூமி தெரிவித்தார்.