பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் நாளை மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Update: 2022-10-01 22:08 GMT

சென்னை,

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

திருவேற்காடு: ஐஸ்வர்யா தோட்டம், ராயல் தோட்டம், ஜெயலட்சுமி நகர், ஆதிலட்சுமி நகர், ஏ.ஜி.எஸ்.மருத்துவ கல்லூரி, பி.எச்.சாலை.

பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.         

Tags:    

மேலும் செய்திகள்