திருப்பாலை, பாண்டிகோவில் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்

மதுரை திருப்பாலை, பாண்டிகோவில் பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2022-12-20 19:43 GMT

மதுரை திருப்பாலை, பாண்டிகோவில் பகுதியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

திருப்பாலை துணை மின் நிலையம்

திருப்பாலை மற்றும் பசுமலை துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் இன்று(புதன்கிழமை) நடைபெறுகிறது. எனவே திருப்பாலை துணை மின்நிலையத்திற்குட்பட்ட பகுதிகளான திருப்பாலை, நாராயணபுரம், ஆத்திகுளம், அய்யர்பங்களா,வள்ளுவர் காலனி, குலமங்கலம், கண்ணனேந்தல், பரசுராம்பட்டி, சூர்யாநகர், ஊமச்சிகுளம், கடச்சனேந்தல், மகாலட்சுமிநகர், உச்சபரம்புமேடு, பார்க்டவுன், பி மற்றும் டி காலனி, பாமாநகர், பம்பாநகர், பொறியாளர் நகர், செட்டிகுளம், சண்முகா நகர், விஜய நகர், கலைநகரின் ஒரு சில பகுதிகள், மீனாட்சி நகர், ஈ.பி. காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இலந்தைகுளம் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளான இலந்தைகுளம், கோமதிபுரம், பாண்டிகோவில், பண்ணை, மேலமடை, எல்கார்ட், கண்மாய்பட்டி, செண்பகத்தோட்டம், ஹவுசிங் போர்டு, உத்தங்குடி, உலகநேரி, ராஜீவ்காந்தி நகர், சோலைமலைநகர், வளர்நகர், அம்பலகாரப்பட்டி, டெலிகாம்நகர், பொன்மேனி காடர்ன், ஸ்ரீ ராம்நகர், பி.கே.பி.நகர், ஆதீஸ்வரன் நகர், டி.எம்.நகர் பின்புறம், வி.என்.சிட்டி, கிளாசிக் அவென்யூ மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முருகன் தெரிவித்தார்.

பசுமலை துணை மின் நிலையம்

பசுமலை துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் இன்று நடைபெறுகிறது. எனவே மாடக்குளம் மெயின்ரோடு, கந்தன்சேர்வை நகர் முழுவதும், தேவிநகர், கிருஷ்ணாநகர், சபரி நகர், நமச்சிவாய நகர், ஐஸ்வர்யாநகர், சொரூப், பெரியார் நகர், மல்லிகை காடர்ன், அய்யனார் கோவில், சத்திய மூர்த்தி நகர், அருள்நகர், காயத்திரி தெரு, பிரித்தம் தெரு, உதயா டவர், துரைச்சாமி நகர் ஆகிய பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பழனி தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்