திருச்செந்தூர் கோட்டத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருச்செந்தூர் கோட்டத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

Update: 2022-07-05 14:25 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர், ஆறுமுகநேரி, சாத்தான்குளம், நாசரேத், உடன்குடி பகுதிகளில் சீரான மின்விநியோகம் வழங்கும் பொருட்டு முன்னேற்பாடாக சேதமடைந்த மின்கம்பங்கள், மின்பாதைகளில் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மரக்கிளைகளை அகற்றுதல், சேதமடைந்துள்ள இழுவை கம்பிகளை சீரமைத்தல், தொய்வாக உள்ள மின்பாதைகள் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் தோப்பூர், முத்தாரம்மன் கோவில் தெரு, அமலி நகர், ராணி மகாராஜபுரம், அடைக்கலாபுரம், நத்தக்குளம், தைக்காவூர், நைனார்பத்து, சீர்காட்சி, ஒடக்கரை, காயிதே மில்லத் நகர், காட்டுமொகுதூம்பள்ளி, பெருமாள்புரம், நாலுமாவடி, வீரமாணிக்கம், குரும்பூர், அடப்புவிளை, விஜயராமபுரம், சாமித்தோப்பு, கண்டுகொண்டான்மாணிக்கம், கருவேலம்பாடு, ஆனந்தபுரம், பழங்குளம், அறிவான்மொழி, வழையடி, அகப்பைகுளம், திருநிறையூர், குளத்துகுடியிருப்பு, கடையனோடை, கேம்பலாபாத், வடலிவிளை, தோப்பூர், ஏழுவரைமுக்கி, நடுக்கடைதெரு, சுல்தான்புரம், ஸ்டாலின் நகர், மாரியம்மன்கோவில் தெரு, ஆர்சி சர்ச் தெரு, விநாயகர் காலனி, கொத்துவாபள்ளி தெரு, மணப்பாடு, உதிரமாடன்குடியிருப்பு, இடைச்சிவிளை ஆகிய பகுதிகளில் இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும்.

மேலும், திருச்செந்தூர் தெப்பக்குளம், கரம்பாவிளை, முத்தாரம்மன் கோவில் தெரு, சீருடையார்புரம், கரிசன்விளை, சமத்துவபுரம், எள்ளுவிளை, குங்கம்மாள்புரம், மாநாடு, செட்டிவிளை, சோலைக்குடியிருப்பு, சிங்கித்துறை, சதுக்கை தெரு, நைனார்தெரு, வடக்கு காயல்பட்டினம் உப்பள பகுதிகள், காணியாளன்புதூர், வள்ளிவிளை, சோனகன்விளை, சாத்தான்குளம் தைக்கா தெரு, ஜக்கம்மாள் காலனி, காந்தி நகர், புளியடி மாரியம்மன் கோவில் தெரு, ராஜரத்தினம் நகர், குலசை ரஸ்தா, நெடுங்குளம், கோமாநேரி, கலுங்குவிளை, சமத்துவபுரம், ஆழ்வார்தோப்பு, அப்பன்கோவில், வரதராஜபுரம், இலங்கநாதபுரம், அடைக்கலாபுரம் (மெஞ்ஞானபுரம்), வீரவநல்லூர், புதுமனை, கொட்டங்காடு, சிவலூர், கூடல் நகர், உசரத்துகுடியிருப்பு, தோப்புவிளை, பெரியதாழை, செட்டியார்பனை ஆகிய பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும்.

இந்த தகவலை திருச்செந்தூர் கோட்ட மின் வினியோக செயற்பொறியாளர்‌ விஜயசங்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்