இன்றும், நாளையும் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
நாமக்கல் மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்சாரம் நிறுத்தப்படுகிறது.;
இன்று மின்சாரம் நிறுத்தம்
திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட ஏமப்பள்ளி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன்காரணமாக இன்று (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விட்டம்பாளையம், ஏமப்பள்ளி, ஏ. கைலாசம்பாளையம், பெருமாம்பாளையம், பிலிக்கல் மேடு, மலப்பாளையம், பொட்லி பாளையம், கொல்லபாளையம், நைனாம்பாளையம், வெள்ளியம்பாளையம், கோரக்குட்டை, வேப்பம்பாளையம், செரயாம்பாளையம், அணிமூர், பன்னீர்குத்திபாளையம், பிரிதி வேட்டுவம்பாளையம், பலநாயக்கன்பாளையம், பட்லூர், இறையமங்கலம், சாலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
இளநகர்
திருச்செங்கோடு கோட்டத்திற்கு உட்பட்ட இளநகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வேல கவுண்டம்பட்டி, இளநகர், இலுப்புலி, தொண்டிபட்டி, செக்குப்பட்டி பாளையம், எளையம்பாளையம், ஜேடர்பாளையம், கூத்தம்பூண்டி, மானத்தி, பெரிய மணலி, செருக்கலை, கோக்கலை, மாணிக்கம் பாளையம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்.
நாளை
அதேபோல் நாமக்கல் அருகே உள்ள வளையப்பட்டி துணை மின்நிலையத்தில் நாளை (வியாழக்கிழமை) மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வளையப்பட்டி, புதுப்பட்டி, மேட்டுப்பட்டி, வாழவந்தி, ரெட்டையாம்பட்டி, ஜம்புமடை, செவந்திப்பட்டி, குரும்பப்பட்டி, பொம்மசமுத்திரம், கணவாய்பட்டி, நல்லூர், திப்ரமகாதேவி, வடுகப்பட்டி, மோகனூர், ஒருவந்தூர் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இதேபோல் நாளை காளப்பநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்திலும் மின்சார பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காளப்பநாயக்கன்பட்டி, பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடி காவல், துத்திக்குளம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இந்த தகவல்களை மின்வாரிய செயற்பொறியாளர்கள் நாகராஜன், முருகன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.