நெல்லை டவுனில் 20-ந் தேதி மின்தடை

நெல்லை டவுனில் 20-ந் தேதி மின்தடை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-09-18 19:46 GMT

நெல்லை நகர்ப்புற மின் கோட்டத்திற்கு உட்பட்ட பழைய பேட்டை, பொருட்காட்சி திடல் துணை மின் நிலையங்களில் 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. எனவே அங்கு இருந்து மின்வினியோகம் பெறும் நெல்லை டவுன் மேலரத வீதி மேல் பகுதிகள், தெற்கு ரத வீதி தெற்கு பகுதிகள், வடக்கு ரத வீதி வடக்கு பகுதிகள், பழைய பேட்டை, காந்திநகர், திருப்பணிகரிசல்குளம், வாகைகுளம், குன்னத்தூர், பேட்டை, தொழிற்பேட்டை, பாட்டபத்து, அபிஷேகப்பட்டி, பொருட்காட்சி திடல், நெல்லை டவுன், எஸ்.என்.ஹைரோடு, பூம்புகார், ஸ்ரீபுரம், சிவந்தி ரோடு, பாரதியார் தெரு, சி.என். கிராமம், குறுக்குத் துறை, கருப்பன் துறை, டவுன் கீழரத வீதி போஸ்ட் மார்க்கெட், ஏ.பி. மாடத்தெரு, சாமி சன்னதி தெரு, அம்மன் சன்னதி தெரு, மேல மாடவீதி, கள்ளத்தி முடுக்குதெரு, நயினார்குளம் ரோடு தெரு, சத்தியமூர்த்தி தெரு, நயினார்குளம் மார்க்கெட், வ.உ.சி. தெரு, வையாபுரி நகர், பாரத் இந்துஸ்தான் பெட்ரோலியம், சிவன் கோவில் தெற்கு தெரு, ராம்நகர் மற்றும் ஊருடையான் குடியிருப்பு பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.


Tags:    

மேலும் செய்திகள்