பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மறியல்
கரூரில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர்.;
சாலை மறியல்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சி.ஐ.டி.யு சார்பில் ஒப்பந்த ெதாழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி கரூர்-கோவை ரோட்டில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியல் நடந்தது.
இதற்கு நாமக்கல் கிளை திட்ட செயலாளர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 54 பேரை கரூர் டவுன் போலீசார் கைது செய்து வேனில் ஏற்றி சென்றனர்.
பணி நிரந்தரம் செய்ய வேண்டும்
புயல் பாதிப்புகளின்போது இரவு, பகல் பாராமல் பணிபுரிந்து மின்சார வாரியத்தை தலை நிமிர வைத்த ஒப்பந்த ெதாழிலாளர்களை அடையாளம் கண்டு பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசும், மின்சார வாரியமும் அறிவித்தபடி தினக்கூலி ரூ.380-ஐ அனைத்து ஒப்பந்த ெதாழிலாளர்களுக்கும் வழங்க வேண்டும், ஒப்பந்த ெதாழிலாளர்களுக்கு வருகை பதிவேட்டை பராமரிக்க வேண்டும், மின்வாரியத்தில் ஒப்பந்த ெதாழிலாளர்கள் இல்லை என்ற பொய்யான அறிக்கை அனுப்புவதை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு, வேலைப்பளு பேச்சுவார்த்தைகளில் ஒப்பந்த ெதாழிலாளர்களின் கோரிக்கைகளை பேசி தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.