பவுர்ணமி கிரிவலம்: திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஆவணி மாத பவுர்ணமியையொட்டி இன்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

Update: 2023-08-30 04:18 GMT

கோப்புப்படம் 

சென்னை,

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

இந்த நிலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி இன்று வருகிறது. அதன்படி இன்று காலை 10.58 மணிக்கு கிரிவலம் தொடங்கி நாளை காலை 7.05 மணி வரை கிரிவலம் செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஆவணி மாத பவுர்ணமியையொட்டி இன்று சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இன்று பிற்பகல் 12.30 மணிமுதல் குளிர்சாதன மற்றும் நவீன சொகுசு பஸ்கள் இயக்க போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

பயணிகள் www.tnstc.in, tnstc அதிகாரப்பூர்வ செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு நாளை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்