மின்சாரம் பாய்ந்து கோழி பண்ணை உரிமையாளர் பலி
மின்சாரம் பாய்ந்து கோழி பண்ணை உரிமையாளர் பலியானார்.;
லால்குடியை அடுத்த நன்னிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 50). இவர் கோழிபண்ணை நடத்தி வந்தார். சொந்தமாக கோழி பண்ணை வைத்துள்ளார். நேற்று காலை சுேரஷ் கோழிபண்ணையில் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, அவர் கோழிகளுக்கு தண்ணீர் வைப்பதற்காக மின்மோட்டார் சுவிட்சை இயக்கியதாக தெரிகிறது. இதில் மின்கசிவு காரணமாக சுரேஷ் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.