பொதிகை ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

புளியங்குடி அருகே பொதிகை ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

Update: 2023-07-07 18:45 GMT

கடையநல்லூர்:

புளியங்குடி அருகே புன்னையாபுரம் பகுதியில் இந்து, கிறிஸ்தவர்கள், முஸ்லிம் இளைஞர்களால் தாமாக முன்வந்து பொதிகை ஈஸ்வரர் என்ற கோவிலை கட்டி முடித்துள்ளனர். இக்கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று முன்தினம் மகா கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

அதனை தொடர்ந்து எந்திர ஸ்தாபனம், மருந்து சாத்துதல் மற்றும் யாகசாலை பூஜைகள் நடந்தது. கும்பாபிஷே நாளான நேற்று காலையில் மகாபூர்ணாகுதி, தீபாராதனையை தொடர்ந்து விமான கோபுர கலசம் மற்றும் சுவாமி, நந்திகேஸ்வரருக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அலங்கார தீபாரதனைகள் நடைபெற்றது. உத்தரபிரதேச ஸ்ரீலஸ்ரீ ராஜயோகி ரகுபதி சுவாமிகள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.

நிகழ்ச்சியில் போலீஸ் டி.ஜி.பி. வன்னிய பெருமாள், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன், மின் பகிர்மான கழக நெல்லை மண்டல தலைமை பொறியாளர் குப்புராணி, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலைகுமார், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் செல்லதுரை, நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபிபுர் ரஹ்மான், ஒன்றிய கவுன்சிலர் சிங்கிலிப்பட்டி மணிகண்டன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்