ஸ்ரீமுஷ்ணம்,
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு ஸ்ரீமுஷ்ணம் பூவராகசுவாமி கோவிலில் சொக்கப்பனை கொளுத்தும் உற்சவ நிகழ்ச்சி மற்றும் சாமி விதிஉலா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இதையடுத்து இரவில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் சாமி விதிஉலா நடைபெற்றது. கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் உற்சவர் சிலை பீடத்தில் விரிசல்கள் ஏற்பட்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக வீதிஉலா நடத்தப்படவில்லை. இந்த நிலையில் சிலை பீடத்தில் இருந்த விரிசல் சரிசெய்யப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் சாமி விதிஉலா நடத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்தனர்.