பிளாஞ்சேரி கைலாசநாதசுவாமி கோவிலில் பவுர்ணமி ஜெயமங்களா யாகம்
பிளாஞ்சேரி கைலாசநாதசுவாமி கோவிலில் பவுர்ணமி ஜெயமங்களா யாகம் நடந்தது.
திருவிடைமருதூர்:
கும்பகோணம் அருகே உள்ள பிளாஞ்சேரியில் கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு அஷ்ட பைரவர்கள் தனித்தனி சன்னதிகளில் சூழ சரபசூழினி அம்மன் தனி கோவில் கொண்டு அருள் பாலிக்கிறார். சரபசூழினி அம்மனுக்கு பவுர்ணமி தோறும் ஜெயமங்களா யாகம் நடைபெறுவது வழக்கம். நேற்றுமுன்தினம் பவுர்ணமியையொட்டி ஜெயமங்களா யாகம் நடந்தது. தொடர்ந்து கோவில் பரம்பரை அறங்காவலர் நாகராஜ சிவாச்சாரியார் தலைமையில் கோவில் அர்ச்சகர் கண்ணன் குருக்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களை கொண்டு யாக பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கடம் புறப்பட்டு சரப சூழினி அம்மன் சன்னதிக்கு கொண்டுவரப்பட்டது. அங்கு கடம் புனித நீர் தெளிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ஜெயமங்களா யாகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்