ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் அணியும் நிகழ்ச்சி

ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் அணியும் நிகழ்ச்சி

Update: 2022-08-11 19:35 GMT

கும்பகோணம்

தமிழகத்தில் ஆடி மாதம் கடைசி அல்லது ஆவணி மாத பவுர்ணமி நாளில் ஆவணி அவிட்டம் எனும் பூணூல் அணியும் நிகழ்ச்சி நடப்பது வழக்கம். கல்வி கற்கவும், கல்வி கற்றுத்தரும் குருவுக்கு மரியாதை செலுத்தவும், கற்பிப்பதை போற்றக்கூடிய நிகழ்ச்சியாக ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுகிறது. கும்பகோணம் பகுதியில் உள்ள கோவில்களில் ஆவணி அவிட்டத்தையொட்டி பூணூல் அணியும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கும்பகோணம் மதகடி திரவுபதி அம்மன் கோவில், ஜெகநாதர் பிள்ளையார் கோவில் தெரு பத்மசாலியர் சமூக பாவநாராயண சாமி கோவில் மற்றும் யானையடி பிள்ளையார் கோவிலில் பிராமணர், செட்டியார், விஸ்வகர்மா, ஆசாரியார் உள்ளிட்டோர் பூணூல் அணிந்து கொண்டனர்.

சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

அறுபடை வீடுகளில் 4-ம் படை வீடான சுவாமிமலை சுவாமிநாதர் கோவிலில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு கோவிலில் உள்ள அனைத்து சாமி சன்னதிகள், கோபுரங்கள் மற்றும் பரிவார தெய்வங்கள் அனைத்துக்கும் பூணூல் சாற்றப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் உமாதேவி, சிவாச்சாரியர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்