புதுக்கோட்டையில் பூணூல் அணியும் நிகழ்ச்சி
புதுக்கோட்டையில் பூணூல் அணியும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
புதுக்கோட்டையில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூணூல் அணியும் நிகழ்ச்சி வேதமந்திரங்கள் முழங்க நடந்தது. இதில் சங்கரமடத்தில் திருக்கோகர்ணம் மணிகண்டன் சாஸ்திரிகள் தலைமையில் வேதமந்திரங்கள் முழங்க பூணூல் அணிவிக்கப்பட்டன. இதேபோல் திருக்கோகர்ணத்தில் அனந்தகிருஷ்ண சாஸ்திரிகள் தலைமையில் பூணூல் அணியும் நிகழ்ச்சி நடந்தது. இதில் அந்த பகுதியில் உள்ளவர்கள் பங்கேற்றனர். புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ராமர் மடம், ராம்நகர் விநாயகர் கோவில் உள்பட புதுக்கோட்டையின் பல்வேறு இடங்களில் பூணூல் மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.