தர்மபுரியில் புனரமைக்கப்பட்ட பூமாலை வணிக வளாகம்: முதல்-அமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்
தர்மபுரி பஸ் நிலையம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகம் ரூ.12.70 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த வணிக வளாகத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இந்த புனரமைக்கப்பட்ட வணிக வளாகத்தில் உள்ள 25 கடைகள் மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்கள் விற்பனை செய்வதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வளாகம் திறந்து வைக்கப்பட்ட நிலையில் கடைகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளை மகளிர் சுய உதவிக்குழுக்களிடம் கலெக்டர் சாந்தி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வெங்கடேஷ்வரன் எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது, மகளிர் திட்ட இயக்குநர் பத்ஹி முகமது நசீர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.