நல்லம்பள்ளி அருகேசமயபுரம் மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

Update: 2023-05-04 19:00 GMT

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே தர்மபுரி தொழில் மையம் ஹவுசிங் போர்டு காமராஜ் நகரில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை பொங்கல் வைத்தல் நிகழ்ச்சியும், திருவிளக்கு பூஜை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வணங்கினர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) பால்குடம் மற்றும் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சியும், நாளை (சனிக்கிழமை) மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்