சி.எம்.புதூர் பாலமுருகன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா

Update: 2022-10-27 18:45 GMT

சி.எம்.புதூர் பாலமுருகன் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழாமாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி அருகே சி.எம்.புதூரில் பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம் நடந்தது. இதைத்தொடர்ந்து தினமும் மண்டல பூஜை நடந்து வந்தது. இந்த மண்டல பூஜை நிறைவு நாள் விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை தீப வழிபாடு, கணபதி வழிபாடு, கலச பூஜை, 108 சங்கு பூஜை மற்றும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பாலமுருகனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகாதீபாராதனை நடந்தது. இதில் சி.எம்.புதூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

மேலும் செய்திகள்