விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பொன்னூஞ்சல் வைபவம்
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பொன்னூஞ்சல் வைபவம் நடைபெற்றது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை பெருந்திருவிழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், திருக்கல்யாண வைபவம், தேரோட்டம் நடைபெற்றது. இதில் விளாத்திகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழாவின் நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண கோலத்தில் பொன்னூஞ்சல் வைபவம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பஞ்ச ராகங்களில் வாசிக்கப்படும் நாதஸ்வர இசையில், சுவாமிகளின் பொன்னூஞ்சல் ஆடும் அற்புதமான நிகழ்வை பக்தி பரவசத்துடன் ஆனந்தமாக கண்டுகளித்தனர். நேற்று கோவில் உழவாரப்பணி குழுவினரால் கோலாட்டம் நிகழ்ச்சி நடந்தது.