பொங்கல் பரிசு ெதாகுப்புடன் ரூ.1000 பெற ரேஷன் கடைகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் டோக்கன் வினியோகம்

பொங்கல் பரிசு ெதாகுப்புடன் ரூ.1000 பெற ரேஷன் கடைகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் டோக்கன் வினியோகம்

Update: 2023-01-01 13:28 GMT

திருப்பூர்

பொங்கல் பரிசு ெதாகுப்புடன் ரூ.1000 பெற ரேஷன் கடைகளில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது.

ஆலோசனை

திருப்பூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 98 ஆயிரத்து 693 கார்டுதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க நுகர்பொருள் வாணிப கழக குடோன்களில் இருந்து சர்க்கரை, பச்சரிசி ஆகியவை ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. கூட்டுறவு மாவட்ட வழங்கல் அதிகாரிகள் விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் 1,500-க்கும் மேல் கார்டு உள்ள ரேஷன் கடை பணியாளரை அழைத்து கலெக்டர் வினீத் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் குறுகிய காலத்தில் அனைத்து பயனாளிகளுக்கும் டோக்கன் கொடுத்து பரிசு தொகுப்பு வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. வழக்கமான ரேஷன் பொருள் வழங்கல் பணிகளோடு பரிசு தொகுப்புக்கான டோக்கன்களை நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் வழங்கலாம். பரிசு தொகுப்பு வழங்கும்போது முதியோர், கா்ப்பிணிகளை காத்திருக்க வைக்கக்கூடாது. இணையதள பிரச்சினை ஏற்பட்டால் வேறு வழிமுறைகளை பின்பற்றி, பயனாளிகள் விவரங்களை பதிவு செய்து பரிசு தொகுப்பு வழங்க வேண்டும் என ரேஷன் பணியாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து ரேஷன்கார்டுதாரர்கள் ரேஷன் கடைக்கு நாளை (செவ்வாய்க்கிழமை) சென்று பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.1000 பெற டோக்கன் வாங்கிக்கொள்ளலாம்.

வேட்டி-சேலை

பொங்கலுக்கு முன்பு பயனாளிகளுக்கு வேட்டி சேலை வழங்கப்பட உள்ளது. அதன்படி திருப்பூர் வடக்கு தாலுகாவுக்கு 69,094 வேட்டி, 69,120 சேலை, திருப்பூர் தெற்கு தாலுகாவுக்கு 1 லட்சத்து 475 வேட்டி, 84,156 ேசலை, அவினாசிக்கு 61,820 வேட்டி, சேலை, ஊத்துக்குளிக்கு 24,676 வேட்டி, சேலை, பல்லடத்துக்கு 56, 888, தாராபுரத்துக்கு 76,716, காங்கயத்துக்கு 65,509, உடுமலைக்கு 86,722, மடத்துக்குளத்துக்கு 32,879 வேட்டி, சேலைகளை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. மாவட்டத்துக்கு மொத்தம் 5 லட்சத்து 74 ஆயிரத்து 779 வேட்டி, 5 லட்சத்து 58 ஆயிரத்து 486 சேலை ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், உற்பத்தி செய்யப்பட்ட வேட்டி, சேலைகள் தாலுகா வாரியாக பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது. திருப்பூர் மாவட்டத்துக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் சேலை, 1 லட்சத்து 98 ஆயிரத்து 500 வேட்டி வந்து சேர்ந்துள்ளன. ஒதுக்கீடு செய்யப்பட்டதில் இன்னும் 4 லட்சத்து 38 ஆயிரத்து 486 சேலை, 3 லட்சத்து 76 ஆயிரத்து 279 வேட்டி வரவேண்டியுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கும் நாளில் ரேஷன் கடை வாயிலாக பயனாளிகளுக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்