டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-01-13 18:45 GMT

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரியில் பொங்கல் விழா நடந்தது. கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ் தலைமை தாங்கினார். கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி உதவி பேராசிரியை ஸ்ரீமதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மாணவ-மாணவிகள் பொங்கலிட்டு அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். தொடர்ந்து உறியடித்தல், கோலப்போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தொடர்ந்து தமிழர் பண்பாட்டை வளர்ப்பதில் பெரும் பங்கு வகிப்பது பழைய தலைமுறையா?, புதிய தலைமுறையா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. பட்டிமன்ற நடுவராக உதவி பேராசிரியை ஸ்ரீமதி செயல்பட்டார். பழைய தலைமுறையே என்ற தலைப்பில் உதவி பேராசிரியை உமா, மாணவிகள் முத்துமாரி, சோமசுந்தரி மகேஷ் ஆகியோரும், புதிய தலைமுறையே என்ற தலைப்பில் உதவி பேராசிரியர் செல்லத்துரை, மாணவர்கள் ஞான அருணதீபிகா, விக்னேஷ் ஆகியோரும் பேசினர். உதவி பேராசிரியை வினோலியா நன்றி கூறினார்.

-----

Tags:    

மேலும் செய்திகள்