ஆலங்குளம்,
வெம்பக்கோட்டை தாலுகா முத்துச்சாமிபுரம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் சித்திரை பொங்கல் விழா நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு முளைப்பாரி எடுத்தல், கரகம் எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.