அ.தி.மு.க. பிரமுகர் சரமாரி வெட்டிக்கொலை

திருக்காட்டுப்பள்ளி அருகே அ.தி.மு.க. பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-08-15 20:40 GMT

திருக்காட்டுப்பள்ளி;

திருக்காட்டுப்பள்ளி அருகே அ.தி.மு.க. பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொல்லப்பட்டார். இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அ.தி.மு.க. பிரமுகர்

தஞ்சை அருகே உள்ள திருக்காட்டுப்பள்ளியை அடுத்த மைக்கேல் பட்டி பாம்பாளம்மன் கோவில் அருகில் வசித்து வந்தவர் பிரபு(வயது 38). திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி முன்னாள் கவுன்சிலரான இவர் நகர அ.தி.மு.க. இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளராகவும் இருந்து வந்தார்.திருக்காட்டுப்பள்ளியில் பிளக்ஸ் அடித்து தரும் பணிகளை மேற்கொண்டு வந்த இவர். நேற்று இரவு பணிகளை முடித்துக்கொண்டு பழமார்நேரி சாலையில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு அருகில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

சரமாரி வெட்டிக்கொலை

அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் சரமாரியாக பிரபுவின் தலையில் வெட்டியது. இதில் பலத்த வெட்டு காயங்களுடன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பிரபு உயிரிழந்தார்.இந்த கொலை சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருக்காட்டுப்பள்ளி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட பிரபுவின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை நடந்த இடத்திற்கு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் நேரில் வந்து பார்வையிட்டார்.திருவையாறு துணை போலீஸ் சூப்பிரண்டு ராமதாஸ், திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் பிரபுவின் கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கொலை செய்யப்பட்ட பிரபுவுக்கு சரண்யா என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்