மகாராஜ பிள்ளை சிலைக்கு அரசியல் கட்சியினர் மரியாதை

பாளையங்கோட்டையில் மகாராஜ பிள்ளை நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Update: 2023-07-19 19:25 GMT

பாளையங்கோட்டை நகரசபை முன்னாள் தலைவர் மகாராஜ பிள்ளை நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரி அருகே அமைக்கப்பட்டுள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். தி.மு.க.வினர் நெல்லை மாநகராட்சி மேயர் பி.எம்.சரவணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், முன்னாள் கவுன்சிலர்கள் பாலன், உமாபதி சிவன் மற்றும் மேகலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து துணை மேயர் கே.ஆர்.ராஜூ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

காங்கிரஸ் கட்சியினர் முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன், பொதுக்குழு உறுப்பினர் கவிபாண்டியன் மற்றும் காவேரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.வினர் அமைப்புச் செயலாளர் சுதா பரமசிவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், கவுன்சிலர் சந்திரசேகர் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மகாராஜபிள்ளை சிலை குழுவினர் செயலாளர் உமாபதி சிவன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதில் மகாராஜபிள்ளையின் மகன்கள் உலகநாதன், மீனாட்சிநாதன், பிரம்மநாயகம், ஆறுமுகநயினர் மற்றும் நிர்வாகி செந்தில் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்