பிறந்த நாளையொட்டி பெரியார் சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

நாகர்கோவிலில் பெரியார் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2022-09-17 20:46 GMT

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் பெரியார் பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பிறந்த நாள் விழா

தமிழகம் முழுவதும் பெரியார் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதேபோல் குமரி மாவட்டத்திலும் பெரியார் பிறந்தநாள் விழா நேற்று நடந்தது. இதையொட்டி நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள பெரியார் சிலைக்கு அரசியல் கட்சிகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரும், மாநகராட்சி மேயருமான மகேஷ் தலைமை தாங்கி, சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் குமரி கிழக்கு மாவட்ட பொருளாளர் கேட்சன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில செயலாளர் தில்லைச் செல்வம், மாநகர செயலாளர் ஆனந்த், துணை மேயர் மேரி பிரின்சி லதா, தாழக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க துணைத்தலைவர் இ.என்.சங்கர், ஒன்றிய செயலாளர்கள் பாபு, செல்வம், சுரேந்திரகுமார், குளச்சல் நகர செயலாளர் நாகூர்கான், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் சிவராஜ், நெடுஞ்செழியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க.

அ.தி.மு.க. சார்பில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம்.எல்.ஏ.வுமான தளவாய்சுந்தரம் தலைமை தாங்கி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார்.

நிகழ்ச்சியில் மாநில அமைப்புச் செயலாளர் கே.டி.பச்சைமால், தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், பகுதி செயலாளர் ஜெயகோபால், அணி செயலாளர் ராஜாராம், மாநகராட்சி கவுன்சிலர் அக்‌ஷயா கண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தி.க.- விடுதலை சிறுத்தைகள்

குமரி மாவட்ட திராவிட கழகம் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணியம் தலைமை தாங்கி மாலை அணிவித்தார். மாவட்ட செயலாளர் வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பகலவன் தலைமை தாங்கி பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

லெனினிஸ்டு கம்யூனிஸ்டு

மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி (விடுதலை) சார்பில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அந்தோணிமுத்து தலைமை தாங்கி சிலைக்கு மாலை அணிவித்தார். இதில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் பகுஜன் சமாஜ் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்