மகாத்மா காந்தி சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவிப்பு

தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தியையொட்டி அவரது சிலைக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்தனர். காமராஜர் நினைவு தினத்தையொட்டி அவரது சிலைக்கும் மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2023-10-02 18:45 GMT

தூத்துக்குடியில் காந்தி ஜெயந்தி விழா, காமராஜர் நினைவு தின நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி கிழக்கு மண்டல அலுவலக வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி, காமராஜர் சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழக அரசு சார்பில் மகாத்மா காந்தி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமை தாங்கினார். மேயர் ஜெகன் பெரியசாமி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் தாசில்தார் பிரபாகரன் கலந்து கொண்டார்.

அதன்பிறகு காமராஜர் சிலைக்கும், தொடர்ந்து வ.உ.சி. மார்க்கெட் அருகே உள்ள காமராஜர் சிலைக்கும் அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாநகர் மாவட்ட தலைவர் சி.எஸ்.முரளிதரன் தலைமையில் காங்கிரசார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினரும், மாநகராட்சி கவுன்சிலருமான சந்திரபோஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில், மாவட்டச் செயலாளர் மாலைசூடி அற்புதராஜ் தலைமையில் மகாத்மா காந்தி சிலைக்கு மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, காமராஜர் சிலைக்கு மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வக்கீல் அந்தோணி பிச்சை ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் நாடார் பேரவை தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார், மாவட்ட அவைத்தலைவர் கண்டிவேல், மாவட்ட பொருளாளர் பழனிவேல், மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட ஐக்கிய ஜனதாதளம் சார்பில் காந்தி, காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட தலைவர் எஸ்.சொக்கலிங்கம், மாநில மீனவர் அணி ஜான் பி.ராயர், மாவட்ட செயலாளர் மணிமொழியார், மாவட்ட இளைஞர் அணி தலைவர் அழகர் சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடி மாவட்ட மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் காந்தி ஜெயந்தி கொண்டாடப்பட்டது. மாநில துணைத்தலைவர் வக்கீல் எம்.சொக்கலிங்கம் தலைமையில் கட்சியினர் தூத்துக்குடியில் உள்ள காந்தி, காமராஜர் மற்றும் வ.உசி., குரூர்பர்னாந்து உள்ளிட்ட அனைத்து தலைவர்கள் சிலைகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் ஏ.கே.பாபு, துணைத்தலைவர் ராஜபெருமாள், மாநகர தலைவர் எம்.கோமதிநாயகம், செயலாளர் ராஜேந்திரன், பொருளாளர் சாஸ்தாவு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்