மனைவியுடன் விஷம் குடித்த காவலாளி சாவு

தேனி அருகே மனைவியுடன் விஷ்ம் குடித்த காவலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

Update: 2023-04-07 19:00 GMT

தேனி அருகே மதுராபுரி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 61). இவர் பழனிசெட்டிபட்டியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி தனலட்சுமி (56). இவர்கள் இருவரும் கடந்த 4-ந்தேதி வடபுதுப்பட்டியில் உள்ள தங்களுக்கு சொந்தமான காலி இடத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். அவர்கள் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தங்களது மகன் கஜேந்திரன் ராணுவத்தில் பணியாற்றி வந்ததாகவும், 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்தவர் திரும்பி பணிக்கு செல்லாமல் மதுபோதைக்கு அடிமையாகி தங்களை கொடுமை செய்ததால் தற்கொலைக்கு முயன்றதாக அவர்கள் போலீசாரிடம் தெரிவித்தனர். தீவிர சிகிச்சை பெற்றும் பயனின்றி ரவிச்சந்திரன் நேற்று உயிரிழந்தார். தனலட்சுமி சிகிச்சை பெற்று குணமாகினார். இதுகுறித்து தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், அல்லிநகரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்