கிராமத்தை நோக்கி காவல்துறை நிகழ்ச்சி

கிராமத்தை நோக்கி காவல்துறை நிகழ்ச்சி நடந்தது.

Update: 2022-06-05 18:26 GMT

கரூர்,

கரூர் பாலம்மாள்புரம் கிராமத்தை நோக்கி காவல்துறை நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு (சைபர் கிரைம்) கீதாஞ்சலி தலைமை தாங்கினார். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பங்கள் நடைபெறும்போது, அச்சமின்றி போலீசாருக்கு புகார் தெரிவிக்க வேண்டும். குழந்தைகள் திருமணம் தடுப்பு சட்டம் பற்றியும், பெண்களுக்கு எதிரான குற்ற செயல்களிலிருந்து பெண்களை பாதுகாத்துக்கொள்ள போலீசார் மூலம் ஏற்படுத்தும் விழிப்புணர்வுகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும், 1098 என்ற எண்ணின் மூலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என்றார். மேலும் இணையவழி மூலம் தனிநபர் வங்கி கணக்கில் பணம் மோசடி செய்பவர்களை சட்டப்படி தண்டிக்கும் பொருட்டு அரசு அறிவித்துள்ள 1930 என்ற எண்ணிற்கு உடன் புகார் தெரிவிக்க வேண்டும். காவல்துறை உதவிக்கு அவசர அழைப்பு எண்களான 100 மற்றும் 112-ன் பயன்பாட்டை பொதுமக்கள் நன்கு அறிந்து கொள்ள வேண்டும் என்றார். இந்நிகழ்ச்சியில் போலீசார் மற்றும் பாலம்மாள்புரம் ஊர்பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்