போலீஸ் நிழற்குடை மீது டவுன் பஸ் மோதியது

சேலம் முள்ளுவாடி கேட்டில் போலீஸ் நிழற்குடை மீது டவுன் பஸ் மோதி விபத்துக்குள்ளானது.

Update: 2023-05-11 20:36 GMT

சேலம் முள்ளுவாடி கேட்டில் போலீஸ் நிழற்குடை மீது டவுன் பஸ் மோதி விபத்துக்குள்ளானது.

நிழற்குடை மீது மோதல்

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் ரெயில்வே தண்டவாளத்தின் இடையே புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் ஒருவழிபாதையில் வாகனங்கள் சென்று வருவதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. குறிப்பாக ரெயில் வரும் நேரங்களில் வழக்கத்தைவிட அதிகமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படும்.

இந்நிலையில், சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து நேற்று காலை அஸ்தம்பட்டி வழியாக ஜங்ஷனுக்கு அரசு டவுன் பஸ் சென்றது. அப்போது, முள்ளுவாடி ரெயில்வே கேட் அருகேயுள்ள வளைவில் பஸ் திரும்பும்போது, அங்குள்ள போக்குவரத்து போலீசாரின் நிழற்குடையின் மீது பஸ் எதிர்பாராமல் மோதியது. இதனால் அந்த நிழற்குடை தலைகீழாக சாய்ந்தது.

போக்குவரத்து பாதிப்பு

அப்போது, பஸ்சில் இருந்த பயணிகள் அலறியடித்து கொண்டு கீழே இறங்கினர். ஆனால் பயணிகளுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் உடனடியாக வந்து சாய்ந்த நிழற்குடையை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் உதவியுடன் நிழற்குடையை போலீசார் அப்புறப்படுத்தி போக்குவரத்து சரி செய்தனர்.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறும்போது, சேலம் முள்ளுவாடி கேட் மேம்பாலம் கட்டுமான பணிகள் கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது. ஆனால் இதுவரை பணிகள் முடியவில்லை. இதனால் ஒருவழிப்பாதையில் மட்டும் வாகனங்கள் சென்று வருவதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே, ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

மேலும் செய்திகள்