நெல்லையில் போலீஸ் பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நெல்லையில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Update: 2022-12-04 19:08 GMT

பாபர் மசூதி இடிப்பு தினம் டிசம்பர் மாதம் 6-ந்தேதி கடை பிடிக்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் உத்தரவுப்படி மாநகர பகுதியில் 1,000 போலீசார் ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் வெடி மருந்துகளை கண்டறியும் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் பயணிகளின் உடமைகளை சோதனை செய்து உள்ளே அனுப்புகிறார்கள். இவர்களுடன் ரெயில்வே பாதுகாப்பு படையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மேலும் தாமிரபரணி ரெயில்வே பாலம், தண்டவாள பகுதியில் போலீசார் கண்காணித்து வருகிறார்கள். மோப்ப நாய் உதவியுடன் சோதனைகளும் நடத்தப்படுகிறது.

இதே போல் நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அணுமின் நிலையம், வடக்கு விஜயநாராயணம் கடற்படை தளம், மகேந்திரகிரி இஸ்ரோ மையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்