வாணியம்பாடியில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு
வாணியம்பாடியில் பா.ஜ.க. அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோயம்புத்தூர், மதுரை ஆகிய நகரங்களில் பா.ஜ.க. அலுவலகங்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வீடுகளில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று வாணியம்பாடி நகரம் முழுவதும் போலீஈடுபட்டு வருகின்றனர். பஸ்நிலையம் அருகில் வாணியம்பாடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
மேலும் வாணியம்பாடி பைபாஸ் ரோட்டில் உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அவ்வழியே செல்லும் அனைத்து வாகனங்களும் சோதனைக்கு பின்பு அனுப்பப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.