முக்கிய கட்சித் தலைவர்களின் வீடுகளில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்

முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

Update: 2024-08-20 10:30 GMT

சென்னை,

தமிழகத்தில் முக்கிய அரசியல் கட்சி தலைவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. இவர்களது வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் இரவு, பகல் பாராமல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். அரசியல் முக்கியத்துவம், அச்சுறுத்தல், தனிப்பட்ட கோரிக்கை உள்ளிட்டவற்றின் அடிப்படையில் இந்த பாதுகாப்பு அளிக்கப்படும்.

இந்நிலையில் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தெலுங்கானா முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை ஆகிய மூவரின் வீட்டில் இருந்த போலீஸ் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. மூவரது வீட்டிலும் துப்பாக்கி ஏந்திய 5 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நிலையில் வாபஸ் பெறப்பட்டுள்ளது. அவர்களது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கும்பட்சத்தில் மீண்டும் பாதுகாப்பு வழங்கப்படும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்