பெண்ணை தாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு

பாப்பிரெட்டிப்பட்டி அருகே பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.;

Update:2022-07-15 22:05 IST

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அ.பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் சரளாதேவி (வயது 40). கூலி தொழிலாளி. இவரது கணவர் ராஜா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். தற்போது கணவன், மனைவி 2 பேரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை சரளாதேவி, உறவினர் வேடியப்பன் என்பவரின் நிலத்தில் விறகு எடுத்து கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த, 21 வயது மதிக்கத்தக்க மர்ம நபர் சரளாதேவி சராமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்த புகாரின்பேரில் அ.பள்ளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்