புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி
இந்த ஊர்வலம் அமைதியாக நடைபெற கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் நாளை ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் நடத்தும் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர் .
காமராஜர் சாலையில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் புறப்பட்டு , கடலூர் சாலையில் உள்ள சிங்கார வேலர் சிலை அமைந்துள்ள இடத்தில் நிறைவடைகிறது.
மேலும் இந்த ஊர்வலம் அமைதியாக நடைபெற கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.