போலீசார் அணிவகுப்பு ஊர்வலம்

முதுகுளத்தூரில் போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடந்தது.

Update: 2022-12-26 18:42 GMT

முதுகுளத்தூர்,

முதுகுளத்தூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போதை பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க வலியுறுத்தியும், சட்டவிரோதமாக போதை பொருட்கள் பயன்படுத்துபவர்கள் குறித்து பொதுமக்கள் அச்சமின்றி தகவல் தெரிவிக்கவும் போலீசார் அணிவகுப்பு ஊர்வலத்தை நடத்தினார்கள். முதுகுளத்தூரில் நடந்த போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் துணை சூப்பிரண்டு சின்னகண்ணு தலைமையில் நடைபெற்றது. முதுகுளத்தூர் போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு பஸ் நிலையம் வழியாக காந்தி சிலையை வந்தடைந்தது. இதில் ஏராளமான ஆயுதப்படை போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்