இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து விடுபட உதவி- போலீஸ் சூப்பிரண்டு

போதை பழக்கத்திலிருந்து விடுபட நினைப்பவர்களுக்கு போலீஸ் துறை உதவும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் கூறினார்.

Update: 2023-02-13 19:00 GMT

போதை பழக்கத்திலிருந்து விடுபட நினைப்பவர்களுக்கு போலீஸ் துறை உதவும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் கூறினார்.

1 கோடி கையெழுத்து

கஞ்சா போன்ற போதை பொருட்களை நிரந்தரமாக தடை செய்வதற்கு சட்டம் இயற்ற வேண்டும். போதை இல்லா தமிழகத்தை உருவாக்க வேண்டும். போதை கலாசாரத்தால் சீரழியும் தமிழக இளைஞர்களை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற 21-ந் தேதி வரை தமிழகம் முழுவதும் 1 கோடி கையெழுத்து இயக்கம் நடக்கிறது. அதன்படி திருவாரூர் பழைய பஸ் நிலையத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் 1 கோடி கையெழுத்து இயக்கம் தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமை தாங்கி, முதல் கையெழுத்தை ேபாட்டு இயக்கத்தை தொடங்கி வைத்தார். அவரை தொடர்ந்து துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் கையெழுத்திட்டனர்.

விடுபட உதவி

அப்போது போலீஸ் சூப்பிரண்டு கூறுகையில், போதை பொருட்களில் இருந்து அடுத்த தலைமுறை இளைஞர்களை பாதுகாக்கவும், போதையில்லா தமிழகத்தை உருவாக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது. கஞ்சா உள்ளிட்ட புகை பழக்கத்தில் இருந்து இளைஞர் விரைவில் விடுபட வேண்டும். விற்பனை செய்பவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மேலும் அவர்களின் வங்கி கணக்குகளை முடக்கி உள்ளோம்.

நடவடிக்கை

மேலும் போதை பொருட்கள் விற்பனை குறித்து தெரியவந்தால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அல்லது போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். மேலும் போதை பொருட்களில் இருந்து விடுபட நினைப்பவர்களுக்கு போலீஸ் துறை உதவும். இதற்கு திருவாரூர் மாவட்ட போலீசார் சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

நிகழ்ச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் வேலவன், மாவட்ட செயலாளர் சலாவுதீன், மாவட்ட பொருளாளர் கேசவராஜ் மற்றும் பலர் கலந்து கொணடு போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு பலகையில் கையெழுத்திட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்