ஆற்காடு, வாலாஜாவில் போலீசார் கொடிஅணிவகுப்பு

விநாயகர் சதுர்த்தியையொட்டிஆற்காடு, வாலாஜாவில் போலீசார் கொடிஅணிவகுப்பு நடத்தினர்.

Update: 2022-08-30 19:07 GMT

விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆற்காடு, வாலாஜாவில் போலீசார் கொடிஅணிவகுப்பு நடத்தினர்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பொதுமக்களிடத்தில் அச்சத்தினைப் போக்கும் வகையில் ஆற்காடு நகரில் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா தலைமையில் ஆற்காடு அண்ணா சிலை அருகே இருந்து தொடங்கிய அணிவகுப்பு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை சென்று நிறைவடைந்தது. இதில் ராணிப்பேட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட போலீசார் கலந்து கொண்டு துப்பாக்கியை ஏந்தியவாறு அணிவகுத்து சென்றனர்.

இதேபோல் வாலாஜாவிலும் போலீசார் நேற்று மாலை கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். இதில் போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமையில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, துணை ேபாலீஸ் சூப்பிரண்டு பிரபு, ஆயுதப்படை மற்றும் ராணிப்பேட்டை காவல் உட்கோட்டத்தைச் சேர்ந்த 145 போலீசார் அணிவகுத்து சென்றனர். வாலாஜா அய்யப்பன் கோவிலில் இருந்து தொடங்கிய கொடி அணிவகுப்பு ஊர்வலம் எம்.பி.டி சாலை, வாலாஜா பஸ்நிலையம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாக சென்று மகாத்மா காந்தி பூங்கா அருகே முடிவடைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்