மாநில தடகள போட்டியில் நாமக்கல் போலீசார் சாதனை

மாநில தடகள போட்டியில் சாதனை படைத்த நாமக்கல் போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

Update: 2023-03-16 18:45 GMT

தமிழ்நாடு காவல் துறை சார்பில் 62-வது மாநில அளவிலான காவல்துறையினருக்கான தடகள விளையாட்டு போட்டி திருச்சியில் நடைபெற்றது. இந்த போட்டியில் மேற்கு மண்டலம் சார்பில் கலந்து கொண்ட நாமக்கல் மாவட்ட ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிகுமார் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப்பதக்கம் வென்றார்.

இதேபோல் நாமகிரிப்பேட்டை போலீஸ் ஏட்டு அமுதா குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், எருமப்பட்டி போலீஸ் ஏட்டு ரமேஷ் நீளம் தாண்டுதலில் தங்கப்பதக்கமும் வென்றனர். மேலும் ராசிபுரம் போக்குவரத்து பிரிவு போலீஸ் ஏட்டு அருள்மொழி நீளம் தாண்டுதலில் தங்கப்பதக்கமும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப்பதக்கமும், திருச்செங்கோடு நகர போலீஸ் ஏட்டு ராதாகிருஷ்ணன் நீளம் தாண்டுதலில் வெண்கலப்பதக்கமும் வென்று நாமக்கல் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர்.

பதக்கங்கள் வென்ற போலீசார், நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்