மனைவி பணம் தர மறுத்ததால் மர்ம உறுப்பை பிளேடால் அறுத்துக்கொண்ட தொழிலாளி

கம்பம் அருகே மனைவி பணம் தர மறுத்ததால் தொழிலாளி தனது மர்ம உறுப்பை பிளேடால் அறுத்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2023-03-29 20:30 GMT

தேனி மாவட்டம் கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டி, கருப்பசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). கட்டிட தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி, 3 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு சரவணன், தனது மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அப்போது அவர் பணம் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சரவணன் வீட்டின் குளியலறைக்கு சென்று பிளேடால் தனது மர்ம உறுப்பை தானே அறுத்தார்.

இதனால் வலி தாங்கமுடியாமல் அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டதும், அவரது மனைவி குளியலறைக்கு சென்று பார்த்தபோது, அங்கு சரவணன் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தனது கணவரை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு ெகாண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்