பெருந்துறை ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு பதவி ஏற்பு
பெருந்துறை ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு பதவி ஏற்பு;
பெருந்துறை
பெருந்துறை ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டாக பதவி வகித்து வந்த கவுதம் கோயல், பதவி உயர்வு காரணமாக சென்னைக்கு மாறுதலாகி சென்று விட்டார். அவருக்கு பதிலாக, மயிலாடுதுறையில் துணை சூப்பிரண்டாக பணியாற்றி வந்த எம்.ஜெயபாலன், நேற்று பெருந்துறை ரூரல் துணை சூப்பிரண்டாக பதவி ஏற்று கொண்டார். அவருக்கு பெருந்துறை ரூரல் டிவிசனை சேர்ந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர். பெருந்துறை ரூரல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயபாலன் ஏற்கனவே சத்தியமங்கலத்தில் துணை சூப்பிரண்டாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.