கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ேஜாடி தஞ்சம் அடைந்தது.;
கடத்தூர்
கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ேஜாடி தஞ்சம் அடைந்தது.
காதல் மலர்ந்தது
கோபி அருகே உள்ள வேமாண்டம்பாளையத்தை சேர்ந்த ராஜூ என்பவரின் மகன் மூர்த்தி (வயது 28). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு மில்லில் பிட்டராக வேலை பார்த்து வருகிறார். அதே மில்லில் வேலூர் மாவட்டம் ஆம்பூர் தாலுகா கோவிந்தாபுரத்தை சேர்ந்த குமார் என்பவரின் மகள் சிமல் (20) என்பவரும் வேலை செய்து வருகிறார். ஒரே மில்லில் வேலை பார்த்ததால் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அது காதலாக மாறியது. 3 மாதங்களாக இருவரும் காதலித்து வந்தார்கள். இவர்களுடைய காதலுக்கு இருதரப்பு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தஞ்சம்
இதன்காரணமாக வீட்டை விட்டு வெளியேறிய காதல் ஜோடி நம்பியூர் அருகே உள்ள கடத்தூர் செட்டிபாளையம் மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். பின்னர் பாதுகாப்பு கேட்டு கோபி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
இதைத்தொடர்ந்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மேனகா காதல் ஜோடியின் பெற்றோர்களை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தினார்.