தேசிய அளவிலான மூத்தோர் தடகள போட்டிகள் மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தா நகரில் கடந்த 14-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் திருப்பூர் மாவட்ட ஆயுதப்படையை சேர்ந்த இரண்டாம் நிலை காவலர் பிரேம்குமார், 1,500 மீட்டர் ஓட்டப்போட்டியில் தங்கப்பதக்கமும், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்க பதக்கமும், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெள்ளிப்பதக்கமும், 800 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெண்கலப்பதக்கமும் வென்று சாதனை புரிந்தார்.
பதக்கங்களை வென்ற காவலர் பிரேம்குமாரை, திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் பாராட்டி வெகுமதி அளித்தார். இவர் ஆசிய போட்டிகளில் விளையாட தேர்வாகியுள்ளார்.