கம்பம், போடியில்1 மணி நேரம் பலத்த மழை
கம்பம், போடியில் 1 மணி நேரம் பலத்த மழை பெய்தது.
கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் அவதி அடைந்து வந்தனர். மேலும் மானவாரி நிலங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் பயிர்கள் கருகின. இந்நிலையில் நேற்று மாலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
பின்னர் பலத்த இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதனால் சாலை, ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இதேபோல் போடியில் நேற்று மாலை திடீரென பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதனால் போடி அரசு மருத்துவமனை முன்பு மழைநீர் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.