பள்ளி மாணவர்களுக்கான கவிதை-கட்டுரை போட்டி

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கவிதை-கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Update: 2023-07-03 18:28 GMT

போட்டிகள்

கரூரில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கான கவிதை போட்டி, கட்டுரை போட்டி, பேச்சு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு நேற்று பரிசுகளை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் வழங்கினார்.

இதில் கவிதை போட்டியில் முதல் பரிசு பெற்ற வெண்ணமலை பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி பிரகதிக்கு ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ்களும், 2-ம் பரிசு பெற்ற பழையஜெயங்கொண்டம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவி சிவகீர்த்தனாக்கு ரூ.7 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ்களும், 3-ம் பரிசு பெற்ற பசுபதிபாளையம் ஸ்ரீ சாரதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவி கோபிகாவுக்கு ரூ.5 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

கட்டுரை-பேச்சு போட்டி

கட்டுரை போட்டியில் முதல் பரிசு பெற்ற வெண்ணைமலை சேரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி ஸ்ரேயாவுக்கு ரூ.10 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் சான்றிதழ்களும், 2-ம் பரிசு பெற்ற சின்னதாராபுரம் ஆர்.என்.மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு மாணவி சுபஸ்ரீக்கு ரூ.7 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ்களும், 3-ம் பரிசு பெற்ற சின்னதாராபுரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி சந்தியாவுக்கு ரூ.5 ஆயிரத்திகான காசோலை மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

பேச்சு போட்டியில் முதல் பரிசு பெற்ற கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் சசிதரனுக்கு ரூ.10 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ்களும், 2-ம் பரிசு பெற்ற குளித்தலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி பெரியக்காளுக்கு ரூ.7 ஆயிரத்திற்கான காசோலை மற்றும் சான்றிதழ்களும், 3-ம் பரிசு பெற்ற சின்னசேங்கல் அரசு மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி சந்தியாவுக்கு ரூ.5 ஆயிரத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்