பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, பேச்சு போட்டி

கள்ளக்குறிச்சியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, பேச்சு போட்டி நாளை நடக்கிறது

Update: 2023-06-26 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நாளை(புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.10 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகைக்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டியில் பங்குபெறுவதற்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் பற்றி 9786966833 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது tamildevelopmentvpm@gmail.com என்ற மெயில் மூலமாகவும் அல்லது தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம், விழுப்புரம் என்ற முகவரியை தொடர்பு கொண்டு தகவல் பெற்றுக் கொள்ளலாம். மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி 11, 12-ம் வகுப்பு மாணவ-மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மேற்கண்ட போட்டிகளில் பங்கேற்று பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்