கூலி தொழிலாளி வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.
கூலி தொழிலாளி வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது.;
தாராபுரம், நவ.3-
தாராபுரம் பகுதியை சேர்ந்த குணால் (22) கூலித் தொழிலாளி. இவர் 17 வயது பெண்ணை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றுள்ளார். பிறகு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். பெண்ணின் பெற்றோர்கள் தாராபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரை பெற்றுக் கொண்ட மகளிர் இன்ஸ்பெக்டர் சுஜாதா குணாலிடம் விசாரணை நடத்தினார்.அப்போது ப பாலியல் அத்திமீறில் ஈடுபட்டதாக ஒப்புக்கொண்டார். அதன் பேரில் குணால் மீது 17வயது சிறுமியை கடத்தி பாலியல் துன்புறுத்துதலில் ஈடுபட்ட குற்றத்துக்காக குணாலை போக்சோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பிறகு குணாலை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு பிறகு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.